
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்டு 5-ந்தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. அ.ம.மு.க. இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்த நிலையில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:- மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த தேர்தலில் நிச்சயம் களம் இறங்குகிறது. கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட ஆர்.சுரேஷ் இன்று கட்சி அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். அவருடன் ஆலோசனை நடைபெற இருக்கிறது. அவரே மீண்டும் போட்டியிட வாய்ப்புகள் அதிகம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.