search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் ரமணி
    X
    தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் ரமணி

    திருமணம் செய்வதாக கூறி உல்லாசம்-காதலன் வீட்டு முன்பு இளம்பெண் போராட்டம்

    மேச்சேரி அருகே ஆசை வார்த்தை கூறி உல்லாசம் இருந்து விட்டு திருமணத்துக்கு மறுத்த காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

    மேச்சேரி:

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூணான்டியூர் பகுதியைச்சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 22). இதே கிராமத்தை சேர்ந்தவர் ரமணி (19). இருவரும் சேலத்தில் உள்ள ஒரு ஐ.டி.ஐ.யில் படித்த போது காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்தனர்.

    6 மாதத்திற்கு முன்பு 2 பேரும் திருப்பூருக்கு சென்று அங்கு ஒரே இடத்தில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். அந்த சமயம் ஹரிகரன் ரமணியிடம் திருமண ஆசைக்காட்டி உல்லாசமாக இருந்து வந்தார். ஹரிகரனிடம் ரமணி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். இதற்கு சம்மதம் தெரிவித்த ஹரிகரன் திருமணத்திற்காக ஆதார்கார்டை எடுத்து வருகிறேன் என கூறிக்கொண்டு சொந்த ஊருக்கு வந்தார்.

    அதன் பிறகு அவர் திருப்பூர் செல்லவில்லை. ஏமாற்றம் அடைந்த ரமணி ஹரிகரனை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் அதற்கு ஹரிகரன் மறுத்தார்.

    அதிர்ச்சியடைந்த ரமணி நேற்றிரவு மேச்சேரி வந்து காதலன் ஹரிகரன் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஹரிகரன் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டனர்.

    பூட்டிய வீட்டின் முன்பு அமர்ந்து ரமணி தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அங்கு வந்து ரமணியிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஹரிகரன் தன்னை திருமணம் செய்யும் வரை இங்கிருந்து செல்லமாட்டேன் என கூறி அடம் பிடித்தார்.

    போலீசார் அவரை சமாதானம் செய்து இரவு 10 மணிக்கு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இன்று காலை ரமணி மீண்டும் காதலன் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவர் மண் எண்ணை கேனும் எடுத்து வந்திருந்தார்.

    ஹரிகரன் தன்னை திருமணம் செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் என்றும் அவர் மறுத்தால் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றும் கூறி வருகிறார்.

    போலீசார் ரமணியிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×