search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிராஜன்
    X
    சபரிராஜன்

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு - சபரிராஜன் பெற்றோரிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக சபரிராஜன் பெற்றோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை நடத்தினார்கள்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் மாக்கினாம் பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த குமார், சதிஷ், மணிவண்ணன் ஆகியோரை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கைது செய்தனர். அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த வந்த நிலையில் இந்த வழக்கு பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை, பொள்ளாச்சியில் முகாமிட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரி ராஜன் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே 2 முறை சோதனை நடத்தி அவர்களது பெற்றோரிடம் விசாரணை நடத்தி சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் மாக்கினாம் பட்டி எம்.ஜி.ஆர்.காலனியில் உள்ள சபரிராஜன் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த சபரிராஜன் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாலியல் வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.

    சபரிராஜன் பெற்றோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று 3-வது முறையாக விசாரணை நடத்தியுள்ளனர்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று விசாரணையை மேற்கொண்டதை தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வழக்கு சூடு பிடித்துள்ளது.

    Next Story
    ×