search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை மிரட்டல்
    X
    கொலை மிரட்டல்

    ஹெல்மெட் அணியாமல் தகராறு - போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த இன்ஸ்பெக்டர் மகன்

    சென்னை அருகே ஹெல்மெட் அணியாமல் தகராறில் ஈடுப்பட்ட இன்ஸ்பெக்டர் மகன் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணியில் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஹெல்மெட் அணியாமல் வந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சப்- இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் ஆவேசமாக பேசினார். இது தொடர்பான வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    தன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் என்று கூறிய அந்த வாலிபர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் பெயர் இலங்காமணி என்பதும் தெரிய வந்தது. சென்னையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகனான இவர் மீது அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    294பி அவதூறாக பேசுதல், 353 பணி செய்ய விடாமல் தடுத்தல், 506 (1) கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசாரிடம் தகராறு செய்து சிக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுபோன்ற நடவடிக்கை இன்ஸ்பெக்டர் மகன் மீது பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    Next Story
    ×