search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணுசக்திக்கு எதிராக தொடர்ந்து போராட்டம்: சுப.உதயகுமார் பேட்டி
    X

    அணுசக்திக்கு எதிராக தொடர்ந்து போராட்டம்: சுப.உதயகுமார் பேட்டி

    கூடங்குளம் அணுசக்திக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று சுப.உதயகுமார் கூறியுள்ளார்.

    நெல்லை:

    அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் தலைவர் சுப.உதயகுமார் நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூடங்குளத்தில் அணுமின் நிலையம் மற்றும் அணுக்கழிவு சேமிப்பு மையம் ஆகியவை மிகவும் ஆபத்தானவை என நாங்கள் எடுத்து கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பது தொடர்பாக ராதாபுரத்தில் வருகிற 10-ந் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கு தி.மு.க., கம்யூனிஸ்டு மற்றும் பெரும்பாலான எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதைத்தொடர்ந்து கருத்து கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அணுக்கழிவு மையத்தின் தீமைகளை விளக்கி எங்கள் கூட்டமைப்பு சார்பாக வருகிற 29-ந்தேதி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டோம். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். விரைவில் எங்கள் அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவோம். அணுசக்திக்கு எதிராகவும் எங்கள் அமைப்பு சார்பாக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், எஸ்.டி. பி.ஐ. மாவட்ட செயலாளர் கனி, வக்கீல்கள் ரமேஷ், அப்துல் ஜப்பார், புரட்சிகர இளைஞர் அணி சுந்தர்ராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×