search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போர்வெல்களில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு - லாரிகளை சிறைபிடித்து பொது மக்கள் போராட்டம்
    X

    போர்வெல்களில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு - லாரிகளை சிறைபிடித்து பொது மக்கள் போராட்டம்

    போர்வெல்களில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறைபிடித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கம், பாணவேடு தோட்டம், பிடாரிதாங்கல் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் ஜெனரேட்டர் வசதியுடன் தண்ணீர் திருட்டு நடந்து வருகிறது.

    நேற்று இரவு ஏராளமான லாரிகள் தண்ணீர் ஏற்றுவதற்காக அங்கு வந்தன. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் தண்ணீர் ஏற்றிச் சென்ற லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து லாரிகளை சிறை பிடித்து வைத்திருந்த பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இந்த பகுதியில் லாரிகளில் தண்ணீர் எடுக்க தடை விதித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    எங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது 60 அடியில் ஆழ்குழாய் அமைக்கப்பட்ட இடத்தில் தற்போது 300 அடி முதல் 600 அடி வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இங்கு போர்வெல்கள் அமைத்து நூற்றுக்கணக்கான லாரிகளில் தண்ணீர் திருடி எடுத்து செல்லப்படுகிறது. இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் போராட்டங்களில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×