search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளகோவில் பகுதியில் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்
    X

    வெள்ளகோவில் பகுதியில் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்

    வெள்ளகோவிலில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள மாந்தபுரத்தில் விவசாய நிலத்தில் கிணறு உள்ளது. இந்த கிணற்று மோட்டார் கொட்டகைக்கு தமிழக அரசு சார்பில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த மின் மோட்டார் மூலம் தனியார் டேங்கர் லாரிகளில் தண்ணீர் பிடித்து வெள்ளகோவில் பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இது குறித்து தாராபுரம் சப்-கலெக்டர் பவன் குமாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அவர் மாந்தபுரம் பகுதியில் அதிரடி ஆய்வு நடத்தினார். அப்போது விவசாய கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது.

    விவசாய கிணற்றில் தண்ணீர் எடுத்து கொண்டிருந்த 2 டேங்கர் லாரி மற்றும் ஒரு டிராக்டரை சப்-கலெக்டர் பறிமுதல் செய்தார். மின் மோட்டாரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. டேங்கர் லாரிகளை பறிமுதல் செய்ததை கண்டித்து அதன் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தண்ணீர் டேங்கர் லாரிகளை அவர்கள் இயக்கவில்லை. இதனால் 20-க்கும் மேற்பட்ட லாரிகள் வெள்ளகோவில் புதிய பஸ் நிலையம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இன்று 2-வது நாளாக தண்ணீர் டேங்கர் லாரிகள் இயங்கவில்லை.

    Next Story
    ×