search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: ராமேசுவரம்-விழுப்புரம் இடையே மனிதச்சங்கிலி போராட்டம்
    X

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: ராமேசுவரம்-விழுப்புரம் இடையே மனிதச்சங்கிலி போராட்டம்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேசுவரம்- விழுப்புரம் இடையே இன்று மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்த திட்டத்துக்கு இயற்கை விவசாயி நம்மாழ் வாரால் தொடங்கப்பட்ட பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று மாலை விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் வழியாக ராமேசுவரம் வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

    Next Story
    ×