search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ. 23½ லட்சம் மோசடி - மெட்ரோ ரெயில் நிறுவன பெண் காசாளர் கைது
    X

    ரூ. 23½ லட்சம் மோசடி - மெட்ரோ ரெயில் நிறுவன பெண் காசாளர் கைது

    ரூ. 23½ லட்சம் மோசடி செய்த மெட்ரோ ரெயில் நிறுவன பெண் காசாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    சென்னை மெட்ரோ ரயில் இணை பொதுமேலாளர் பார்த்திபன் கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜெயராமனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

    அதில், ‘எங்கள் நிறுவனத்தில் உதவி கணக்காளராக பணிபுரிந்து வந்தவர் பர்கத் பானு. இவர் ஓப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை பார்த்து அந்த நிறுவனங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் பணப்பட்டுவாடா செய்து வந்தார்.

    கடந்த வருடம் 9-ம் மாதம் பர்கத் பானு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்று விட்டார். அப்போது 2018-ம் ஆண்டு 8 மாதம் வேறு ஒரு நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய 23 லட்சத்து 53 ஆயிரத்து 300 ரூபாய் தனிப்பட்ட ஒரு நபரின் கணக்கிற்கு பரிமாற்றம் செய்து மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறி இருந்தார். இதையடுத்து கோயம்பேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தீபக்குமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது உதவி கணக்காளராக பணிபுரிந்து வந்த பர்கத் பானு (வயது 22)தனது உறவினரான முகமத் ஜனத் என்பவரது கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த பர்கத் பானுவை நேற்று செம்மஞ்சேரி காமராஜ் நகரில் வைத்து கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 8 லட்சம் பணம் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் பணத்தை உறவினர் கணக்கிற்கு மாற்றிய பர்கத் பானு அந்த பணத்தை வைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டதும், சொகுசு வாழ்க்கை அனுபவித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×