என் மலர்

  செய்திகள்

  தேன்கனிக்கோட்டை அருகே தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியரை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
  X

  தேன்கனிக்கோட்டை அருகே தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியரை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேன்கனிக்கோட்டை அருகே ஆசைவார்த்தை கூறி தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியரை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
  தேன்கனிக்கோட்டை:

  கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த பஜ்ஜேபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் கூலித்தொழிலாளியான இவருக்கு மீனா (20) என்ற மகள் உள்ளார். இவர் தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் வேலை செய்யும் தனியார் ஆஸ்பத்திரி அருகே உள்ள மருந்து கடையில் பணிபுரியும் படிகநாளம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் (27)என்பவருக்கும் மீனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

  இந்த பழக்கம் நாளாடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் ஊர் சுற்றி உல்லாசமாக இருந்தனர். இதில் மீனா கர்ப்பமானார். இதுகுறித்து மீனா தனது காதலன் சந்திரசேகரிடம் சென்று தெரிவித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். அப்போது அவர் மீனாவிடம் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக கூறியதாக தெரிகிறது.

  இதனால் மனமுடைந்த காணப்பட்ட மீனா வீட்டில் தனியாக இருந்தபோது தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் உடனே அவரை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மீனா 8 மாத கர்ப்பமாக உள்ளார் என்று தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மீனாவிடம் விசாரித்தனர். மீனா நடத்த சம்பவத்தை உறவினர்களிடம் தெரிவித்தார்.

  இதுகுறித்து மீனா தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தன்னை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய சந்திரசேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குபதிவு செய்து சந்திரசேகரை தேடி அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் இல்லை. மேலும் தலைமறைவான சந்திரசேகரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
  Next Story
  ×