என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  அரபிக்கடலில் வாயு புயல்- குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரபிக்கடலில் உருவான வாயு புயல் காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
  நாகர்கோவில்:

  கேரளாவையொட்டி அரபிக்கடலில் வாயு புயல் உருவாகி உள்ளது.

  அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக குமரி மாவட்ட கடல் பகுதியிலும் சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  இன்று முதல் 13-ந்தேதி வரை மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும். இதுபோல கடலில் 3.5 மீட்டர் முதல் 4 மீட்டர் உயரத்திற்கு அலை எழும்பும் என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

  அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

  குமரி மாவட்டத்தின் மேற்கு கடல் பகுதியில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. என்றாலும் மீனவர்கள் கட்டுமரம், வள்ளங்களில் சென்று மீன்பிடிப்பது வழக்கம்.

  கடலில் கொந்தளிப்பும், அலைகளின் சீற்றமும் அதிகமாக இருக்கும் என்பதால் குமரி மாவட்ட கடலோர கிராமங்களில் இருந்து மீனவர்கள் யாரும் கட்டுமரம், வள்ளங்களில் கடலுக்கு செல்லக்கூடாது.

  மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் எச்சரிக்கை அறிவிப்பு கடலோர கிராம பங்கு தந்தையர் மூலம் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
  Next Story
  ×