என் மலர்

  செய்திகள்

  கருத்துகணிப்புகள் பொய்த்துப்போகும்- நாராயணசாமி பேட்டி
  X

  கருத்துகணிப்புகள் பொய்த்துப்போகும்- நாராயணசாமி பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கருத்துக்கணிப்புகளை மட்டும் வைத்து எந்த முடிவையும் சொல்ல முடியாது என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

  புதுச்சேரி:

  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவுதினம் நாளை (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் காங்கிரசாரால் அனுஷ்டிக்கப்படுகிறது. கர்நாடக மாநில ஐ.என்.டி.யூ.சி. சார்பில் ஆண்டு தோறும் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி நினைவு ஜோதி யாத்திரை பெங்களூருவில் இருந்து புறப்பட்டு ஸ்ரீபெரும்புதூரை அடையும்.

  இந்தஆண்டு ஜோதி யாத்ரா கடந்த 15-ந் தேதி பெங்களூருவில் தொடங்கியது. புதுவை வழியாக நாளை ஸ்ரீபெரும்புதூரை யாத்ரா சென்றடையும். நேற்று மாலை ஜோதி யாத்ரா புதுவைக்கு வந்தது. முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரசார் இந்திராகாந்தி சிலை அருகே வரவேற்றனர். லெனின் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் யாத்திரை குழுவினர் இரவு தங்கியிருந்தனர்.

  இன்று காலை மீண்டும் யாத்திரை புறப்பட்டது. இதற்கான வழியனுப்பு விழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது. முதல்- அமைச்சர் நாராணசாமி ஜோதியை அவர்களிடம் வழங்கி வழியனுப்பி வைத்தார்.

  நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெய மூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன், துணைத்தலைவர் தேவதாஸ், காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், தனுசு, நிர்வாகிகள் சீனுவாசமூர்த்தி, கே.எஸ்.பி.ரமேஷ், ஜனார்த்த னன், இளையராஜா, பிரேமலதா, ஞானசேகரன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

  இதைத்தொடர்ந்து முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

  நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர் ராஜீவ்காந்தி. அவர் காலத் தில்தான் அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு ஆகியவற்றில் நாடு பெரும் வளர்ச்சியடைந்தது. அவர் உயிரோடு இருந்திருந்தால் நாடு மேலும் பல வளர்ச்சிகளை கண்டு இருக்கும். அவரின் நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.

  இதனையொட்டி நினைவு யாத்திரை பெங்களூருவில் இருந்து வந்துள்ளது. நாளை புதுவை காங்கிரசார் சார்பில் ராஜீவ்சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ஸ்ரீபெரும்புதூருக்கு செல்கிறோம். அங்கு நடைபெறும் அமைதி பேரணியில் பங்கேற் கிறோம்.

  நாட்டில் 80 கோடி வாக்காளர்கள் இருக்கும் போது 5 அல்லது 6 லட்சம் வாக்காளர்களிடம் மட்டும் கருத்துக்களை கேட்டு வெளியிடுவது சரியானதாக இருக்காது.

  கடந்த காலத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மீண்டும் வெற்றி பெற்று அவரே பிரதமர் ஆவார் என கருத்துக்கணிப்பு கூறியது. ஆனால், அவர் தோல்வியடைந்தார். 2009-ம் ஆண்டு மன்மோகன்சிங் தோல்வி அடைவார் என கருத்துக்கணிப்பு கூறியது.

  ஆனால், மன்மோகன்சிங் பிரதமர் ஆனார். இதுபோல பல மாநிலங்களில் கருத்துக் கணிப்பு பொய்யாகி உள்ளது. எனவே, கருத்துக்கணிப்புகளை மட்டும் வைத்து எந்த முடிவையும் சொல்ல முடியாது. அதேபோல இந்த ஆண்டும் கருத்துக் கணிப்புகள் பொய்த்து போகும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×