search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்யாறு-திருப்பத்தூரில் குடிநீர் கேட்டுகாலி குடங்களுடன் பெண்கள் மறியல்
    X

    செய்யாறு-திருப்பத்தூரில் குடிநீர் கேட்டுகாலி குடங்களுடன் பெண்கள் மறியல்

    செய்யாறு மற்றும் திருப்பத்தூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த தண்டரை மேட்டுக்காலனி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.அவர்கள் அனைவருக்கும் கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து குடிநீர் வழங்கபட்டு வந்தன.

    கோடை வறட்சியின் காரணமாக ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால் அப்பகுதிக்கு குடிநீர் சரிவர வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கபட வில்லை என்று கூறபடுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை செய்யாறு-ஆரணி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். செய்யாறு தாசில்தார் மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அபோது பொதுமக்கள் கூறுகையில்:- எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளை உடனடியாக தூர்வார வேண்டும், மேலும் குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்க வேண்டும் என்று கூறினர்.

    இரண்டு அல்லது மூன்று நாட்களில் குடிநீர் தட்டுபாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என்ற அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குரிசிலாபட்டு வடுகம் முத்தம்பட்டி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல மாதங்களாக குடிநீர் வழங்கபடவில்லை. இது குறித்த அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கபடவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆலங்காயம் திருப்பத்தூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து வட்டார வளர்ச்சி பொறியாளர் சேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதானந்தம், குரிசிலாபட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது குடிநீர் பிரச்சனையை தீர்க்க தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    ஒடுகத்தூர் அருகே உள்ள அகரம் ஊராட்சியில் 3 மாதங்களாக குடிநீர் சரியாக வரவில்லை. இதனை கண்டித்து பொதுமக்கள் ஒடுகத்தூர்-மாதனூர் செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.

    வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    Next Story
    ×