search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் முடிவுக்கு பிறகு மோடியும், எடப்பாடி பழனிசாமியும் வீட்டிற்கு செல்வார்கள் - துரைமுருகன்
    X

    தேர்தல் முடிவுக்கு பிறகு மோடியும், எடப்பாடி பழனிசாமியும் வீட்டிற்கு செல்வார்கள் - துரைமுருகன்

    தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் மோடியும் எடப்பாடி பழனிசாமியும் வீட்டிற்கு செல்வார்கள் என பிரசார கூட்டத்தில் துரைமுருகன் கூறியுள்ளார். #DMK #DuraiMurugan
    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தெற்கு மாவட்ட சார்பில் மாப்பிள்ளையூரணி, சிலுவைப்பட்டி சந்திப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கனிமொழிக்கு பிரசாரம் செய்ய தூத்துக்குடிக்கு நான் வந்திருக்க வேண்டும். ஆனால் எனக்கு வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி தொகுதி ஒதுக்கப்பட்டு பணியாற்ற வேண்டியது இருந்ததால் வரமுடியவில்லை. அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கன்னியாகுமரியில் கனிமொழி போட்டியிட வேண்டும் என்றும் சென்னையில் அவருக்கு பல தொகுதிகள் இருந்தும் நான் தூத்துக்குடியில் நின்றால் சரியாக வரும் என்று சொன்னேன். காய்ந்த பகுதியாக இருக்கும் தொகுதியை வளமான தொகுதியாக மாற்றும் திறமை கனிமொழிக்கு உண்டு என்று கருதினேன்.

    கே.வி.கே. சாமி பெயரை சொன்னால் வீரம் கொப்பளிக்கும். தன்னடக்கம், எடுத்தேன், கவிழ்த்தேன் என்றில்லாமல் இரக்ககுணம் கொண்டவர் கனிமொழி. சோதனைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்தவர். பாராளுமன்றத்திற்கு செல்பவர்கள் இந்தி அல்லது ஆங்கிலம் பேச தெரியனும். கனிமொழி சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவர். பெண்ணுரிமைக்காக போராடுபவர்.

    இங்குள்ள குடிதண்ணீர் பிரச்சனையை தீர்க்கவும், தொழிற்பேட்டை அமைக்கவும் கனிமொழியால் தான் முடியும். நான்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்கள் முருகன் பெயரை கொண்டவர்கள். அவர்கள் வெற்றிப் பெறுவார்கள். இது பெரிய பஞ்சாயத்தாக இருப்பதால் நகராட்சியாக கூட மாற்றலாம்.

    பெண்கள் ஓரமாக ஒதுங்கி இருந்த காலம் மாறி இப்போது ஆண்கள் ஒதுங்கி இருக்கும் நிலை வந்துள்ளது. மாற்றம் வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். காரணம் கேஸ் விலை உயர்வு என பல உள்ளன. தேர்தல் முடிவுக்கு பிறகு மோடியும், எடப்பாடியும் வீட்டிற்கு செல்வார்கள். நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று கனவு காணலாம். நீங்கள் இனி ஆட்சிக்கு வருவதற்கு கனவே காணமுடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நான் இங்கு போட்டியிட்டதற்கு காரணம் துரைமுருகன் தான். மக்களைப்பற்றி கவலைப்படாத முதல்வர் எடப்பாடி, ஓ.பி.எஸ்., ஆகியோர் எம்.எல்.ஏவாக இருப்பதற்கு கூட தகுதி இல்லாதவர்கள். பொள்ளாச்சியில் 7 ஆண்டுகளாக நடந்த பாலியல் கொடுமை ஏராளம். அதனால் சிலர் தற்கொலை செய்யும் நிலைக்கு வந்தனர். அரசு முறையாக எந்த நடிவடிக்கையும் எடுக்காமல் புகார் கொடுக்க சென்ற பெண்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு மிரட்டல் இப்படி ஒரு ஆட்சி தேவையா? ஜெயலலிதா ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லி பெண்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பு இதுதானா? ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று ஓ.பி.எஸ். கூறினார். இப்படி தன்னை ஆளாக்கிய தலைமைக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர்கள். #DMK #DuraiMurugan
    Next Story
    ×