search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுலுக்கு எதிராக கறுப்பு கொடி- அர்ஜூன் சம்பத் உள்பட 119 பேர் மீது வழக்கு
    X

    ராகுலுக்கு எதிராக கறுப்பு கொடி- அர்ஜூன் சம்பத் உள்பட 119 பேர் மீது வழக்கு

    ராகுல் காந்திக்கு எதிராக கறுப்பு கொடி காட்டிய இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 119 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். #rahulgandhi #arjunsampath

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் குமரிக்கு வரும் ராகுல்காந்திக்கு கறுப்புக்கொடி காட்டப்படும் என இந்து மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று அஞ்சுகிராமம் சந்திப்பில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ராகுல்காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அனுமதி இன்றி கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 119 பேர் மீது அஞ்சுகிராமம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    இதே போல் அஞ்சு கிராமத்தில் ராகுல்காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா இளைஞரணி மாவட்ட செயலாளர் அருள் சிவா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட அருள்சிவா உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். #rahulgandhi #arjunsampath

    Next Story
    ×