என் மலர்

  செய்திகள்

  கட்சியில் நீக்கப்பட்ட வி.ஜி.கே.மணி பா.ம.க. கொடியை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - ஜி.கே.மணி அறிக்கை
  X

  கட்சியில் நீக்கப்பட்ட வி.ஜி.கே.மணி பா.ம.க. கொடியை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - ஜி.கே.மணி அறிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கட்சியிலிருந்து நீக்கப்பட்ட வி.ஜி.கே.மணி பா.ம.க. கொடியை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #PMK

  சென்னை:

  பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  நாகப்பட்டினம் மாவட்டம் வழுவூரைச் சேர்ந்த வி.ஜி.கே. மணி தொடர்ந்து கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று மாவீரன் குரு பரிந்துரைத்ததன் அடிப்படையில் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இரு முறை நீக்கப்பட்டவர். அவர் மீண்டும் சேர்க்கப்படவில்லை.

  பாட்டாளி மக்கள் கட்சியுடன் எந்த வகையிலும் சம்பந்தமில்லாத நபரான வி.ஜி.கே. மணி, கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

  கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நபரான வி.ஜி.கே.மணி, அண்டை மாவட்டங்களான அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்று கட்சியின் பெயரால் நிகழ்ச்சிகளை நடத்தி, அதில் கட்சிக்கு எதிராக பேசி வருகிறார்.

  டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு எதிராக அவதூறு பரப்புரைகளில் அந்த நபர் ஈடுபட்டு வருகிறார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் அவர் கட்சிக் கொடியை காரில் பறக்க விடுவதை ஏற்க முடியாது.

  கட்சிக் கொடியை உடனடியாக காரிலிருந்து அகற்றாவிட்டால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

  பாட்டாளி மக்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும், கட்சி விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதற்காக கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்ட வி.ஜி.கே. மணியுடன் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும், சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இன்று முதல் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண் டாம்.

  மேலும், வி.ஜி.கே. மணி பற்றி சமூக ஊடகங்களில் எந்தப் பதிவும் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதை மீறி செயல்படுபவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PMK

  Next Story
  ×