search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயலுக்கு நிவாரணம் கேட்டு பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் - தம்பிதுரை
    X

    கஜா புயலுக்கு நிவாரணம் கேட்டு பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் - தம்பிதுரை

    ‘கஜா’ புயலுக்கு நிவாரணம் கேட்டு பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். #GajaCyclone #Thambithurai
    கரூர்:

    கரூர் அருகே தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த, பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் இதுவரை சந்தித்திராத புயலாக கஜா புயல் இருக்கிறது. சுனாமி வந்தபோது உயிர்சேதம் அதிகமாக இருந்தது. ஆனால் கஜா புயலால் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    யானையை போல் வந்த புயலால் பல மாவட்டங்களில் வாழை தென்னை, மா, பலா, முந்திரி என விவசாய தோட்டங்கள் முற்றிலும் நிர்மூலமாகி விட்டது. மத்திய குழுவினர் பார்வையிட்டபோது நானும் இருந்தேன். மத்திய குழுவினர் பார்வையிட்டு உண்மையிலேயே பாதிப்பு அதிகம் இருப்பதாக சொன்னார்கள்.



    நாங்கள் குழுவிடம் மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டோம். மேலும் கஜா புயலை ஒரு பேரிடர் இழப்பாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம்.

    வருகிற 11-ந்தேதி கூட இருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் அ.தி.மு.க.வை சேர்ந்த 50 எம்.பி.க்களும் காவிரி பிரச்சினைக்கு குரல் கொடுத்தது போல கஜா புயலுக்கும் நிவாரணம் கேட்டு குரல் கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #Thambithurai 

    Next Story
    ×