என் மலர்

  செய்திகள்

  குமரி மாவட்டத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம்- பாரதிய ஜனதா கட்சி அறிவிப்பு
  X

  குமரி மாவட்டத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம்- பாரதிய ஜனதா கட்சி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை அவமரியாதை செய்த கேரள போலீசாரையும், கேரள அரசையும் கண்டித்து குமரியில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர். #Sabarimala #BJP #PonRadhakrishnan
  நாகர்கோவில்:

  கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான பொன். ராதாகிருஷ்ணன் நேற்று சபரிமலைக்கு இருமுடிகட்டி சென்றார்.

  நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு ஆதரவாளர்களுடன் காரில் சென்ற அவரை கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர். பொன். ராதாகிருஷ்ணன் காரை மட்டும் பம்பைக்கு அனுமதிப்பதாகவும், மற்றவர்களின் காரை அனுமதிக்க முடியாது என்றும் போலீசார் கூறினர். இதனால் போலீசாருக்கும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  இது போல சபரிமலையில் தரிசனம் முடிந்து இன்று அதிகாலை பொன்.ராதாகிருஷ்ணன் கோவை சென்றார். அப்போதும் அவரது ஆதரவாளர்களின் காரை கேரள போலீசார் மீண்டும் தடுத்து நிறுத்தினர். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  சபரிமலையில் நேற்று பொன்.ராதாகிருஷ்ணன் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார் என்ற தகவல் பரவியதும் குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் களியக்காவிளை உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இப்போராட்டம் காரணமாக கேரளாவில் இருந்து நாகர்கோவில் வரும் அரசு பஸ்கள் பாறசாலையில் நிறுத்தப்பட்டது. இது போல நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டது.

  இந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனை அவமரியாதை செய்த கேரள போலீசாரையும், கேரள அரசையும் கண்டித்து குமரி மாவட்டத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர்.

  இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத்தலைவர் முத்து கிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் கேரள அரசும், அங்குள்ள போலீசாரும் கடும் கெடுபிடி காட்டுகிறார்கள். அய்யப்பனை தரிசிக்கவும், சரண கோ‌ஷம் எழுப்பவும் கட்டுப்பாடு விதிக்கும் கேரள அரசையும், போலீசாரையும் கடுமையாக கண்டிக்கிறோம்.

  மேலும் இருமுடிகட்டி சபரிமலைச் சென்ற மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இது பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

  கேரள அரசுக்கும், போலீசாருக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் நாளை பாரதிய ஜனதா கட்சி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

  வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தையும் மூடி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். பஸ்கள் மற்றும் வாகனங்களை இயக்க வேண்டாம். இதனால் ஏற்படும் அசவுகரியங்களை பொதுமக்கள் பொறுத்துக் கொண்டு ஆதரவு தர வேண்டும்.

  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #Sabarimala #BJP #PonRadhakrishnan
  Next Story
  ×