என் மலர்

    செய்திகள்

    மீட்கப்பட்ட சங்கரன்கோவில் பகுதி தொழிலாளர்கள்
    X
    மீட்கப்பட்ட சங்கரன்கோவில் பகுதி தொழிலாளர்கள்

    மலேசியாவில் சிக்கி தவித்த சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 48 தொழிலாளர்கள் மீட்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மலேசியாவில் சாப்பாடு மற்றும் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்த சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 48 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
    சங்கரன்கோவில்:

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை, தாருகாபுரம், மலையடிக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த 48 தொழிலாளர்கள் கடந்த 4 மாதத்திற்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் மலேசியாவிற்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி என தெரிவிக்கப்பட்டது.

    அங்கு சென்றவர்களுக்கு நிறுவனத்தினர் தங்க இடம் கொடுத்து பணி கொடுத்துள்ளனர். முதல் ஒரு மாதம் அனைத்தும் நல்ல படியாக சென்றுள்ளது. முதல் மாதம் சம்பளம் மட்டும் தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக சாப்பாடு மற்றும் சம்பளம் கொடுக்காமல் நிறுவனத்தினர் தமிழக தொழிலாளர்களை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் அவர்கள் பட்டினியால் வாடியுள்ளனர். ஒரு வேளை சாப்பாடு மட்டுமே கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த தொழிலாளர்களை சம்பவம் பற்றி வெளியே தகவல் தெரிவித்து விடக்கூடாது என அவர்களை கண்காணிக்க சிலரை நிறுவனம் நியமனம் செய்துள்ளது. இதன் காரணமாக வெளியில் தகவல் கூட தெரிவிக்க இயலாமல் தொழிலாளர்கள் மிகுந்த பயத்துடன் காணப்பட்டுள்ளனர்.

    சம்பவ இடத்தில் கண்காணிப்பு கும்பல் இல்லாத நேரத்தில் அந்த வழியாக வந்த தமிழகத்தை சேர்ந்த மற்றொரு தொழிலாளி மூலம் பாதிக்கப்பட்ட 48 தொழிலாளர்களும், தங்கள் சோகத்தை செல்போனில் வீடியோ எடுத்து தங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைக்க கூறியுள்ளனர். அதன்பேரில் அவரும் அனுப்பி வைத்துள்ளார்.

    அந்த வீடியோவை பார்த்த சங்கரன்கோவில் பகுதியில் உள்ள அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீடியோ சங்கரன்கோவில் பகுதியில் உள்ள அனைவருக்கும் பரவியது. அவர்களது உறவினர்கள் அனைவரும் சோகத்துடன் காணப்பட்டனர். இதனால் பெரும்பாலான வீடுகளில் இந்த முறை தீபாவளி பண்டிகை கூட கொண்டாடப்படவில்லை.

    தமிழ் வம்சாவளி எம்.எல்.ஏ. காமாட்சி துரைராஜ்

    இந்நிலையில் அந்த வீடியோ மலேசியாவிலும் பரவ தொடங்கியது. இது அங்குள்ள தமிழ் வம்சாவளி எம்.எல்.ஏ. காமாட்சி துரைராஜிற்கும் சென்றது. அவர் உடனே தமிழக தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் வீடியோ மூலம் அவர்களது உறவினர்கள் அனைவரும் பயப்பட வேண்டாம். இந்த தொழிலாளர்கள் அனைவரையும் மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தாருடன் பேசி அவர்களின் ஊதியத்தை பெற்று தந்து நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×