என் மலர்

  செய்திகள்

  10 வகை குல்பி ஐஸ்கிரீம், 5 வகை நறுமணப்பால்- அறிமுகம் செய்தார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
  X

  10 வகை குல்பி ஐஸ்கிரீம், 5 வகை நறுமணப்பால்- அறிமுகம் செய்தார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நுகர்வோர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த பால்வளத்துறை வளாகத்தில், ஐஸ்கிரீம், நறுமணப்பால், கூல் காபி ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்.
  சென்னை:

  ஆவின் நிறுவனம் நுகர்வோர்களின் தேவைக்கேற்ப சென்னை மாநகரில் சராசரியாக தினசரி 12.30 லட்சம் லிட்டர் பால், மற்றும் ரூ.20 கோடி மதிப்பிலான பால் பொருட்களை மாதம் தோறும் விற்பனை செய்து வருகிறது.

  சென்னை நகரில் நுகர்வோர்களின் தேவைகளைக் கண்டறிந்து அதற்கேற்ப பொருட்களை வழங்கி, விற்பனையை உயர்த்தத் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றது.

  தற்போது பிஸ்தா, பாதாம், மேங்கோ, கிரேப், ஸ்டிராபெரி, பைன்ஆப்பிள், பிளாக்கரண்ட், லிட்சி, ஆரெஞ்சு, சாக்லெட் என பத்து வகையான குல்பி ஐஸ்கிரீம்கள், மேங்கோ, ஸ்டிராபெரி, பைன்ஆப்பிள், கிரேப், ஆரெஞ்சு, சர்க்கரையில்லா வெண்ணிலா என ஆறு வகையான யோகர்ட், பைன் ஆப்பிள், ஏலக்காய், சாக்லேட், பிஸ்தா, ஸ்டிராபெரி என ஐந்து வகையான நறுமணப்பால் மற்றும் கூல் காபி போன்ற பால் பொருட்கள் பொது மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றது. தற்பொழுது 24 வகையான பால் பொருட்கள் மற்றும் 80 வகையான ஐஸ்கிரீம்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

  நுகர்வோர்களின் தேவையை மேலும் பூர்த்தி செய்யும் வகையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த பால்வளத்துறை வளாகத்தில், ஐஸ்கிரீம், நறுமணப்பால், கூல் காபி ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்.

  இந்நிகழ்ச்சியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டங்கள் தொடர்பான கையேடு மற்றும் பசுந்தீவன மேம்பாட்டுத் திட்டக் கையேட்டினை வெளியீட்டு, இணையம் மற்றும் ஒன்றியங்களில் பணியாற்றும் 5036 பணியாளர்களுக்கு ரூ.691.45 லட்சம் மதிப்பீட்டிற்கான போனஸ் தொகையினை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

  நுகர்வோர் தங்கள் புகார் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்க 24 மணி நேரம் நுகர்வோர் நலன் மற்றும் சேவைப் பிரிவு கட்டணமில்லா தொலைபேசி 1800 425 3300 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
  Next Story
  ×