search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்.ராஜாவை கைது செய்யாவிட்டால் நாங்களே போலீசில் ஒப்படைப்போம் - பாலகிருஷ்ணன்
    X

    எச்.ராஜாவை கைது செய்யாவிட்டால் நாங்களே போலீசில் ஒப்படைப்போம் - பாலகிருஷ்ணன்

    எச்.ராஜாவை போலீசார் கைது செய்யாவிட்டால் நாங்களே அவரை பிடித்து போலீசில் ஒப்படைக்கும் நிலை ஏற்படும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார். #HRaja #Balakrishnan
    விழுப்புரம்:

    பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி விழுப்புரம் வடக்கு மாவட்ட குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி மைதானத்தில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். மத்திய குழு வாசுகி, மாநில செயற்குழு நூர்முகம்மது, அரசியல் தலைமை குழு ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பரையாற்றினர். கூட்டத்தில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உடனே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.

    தமிழகத்தில் பா.ஜ.க.வினர் சிலரை பேசவிட்டு பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றனர். பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருகிறார். ஆனால் இதுவரை அவரை தமிழக அரசு கைது செய்யவில்லை.

    ஆனால் பா.ஜ.க.வை விமர்சிப்பவர்கள் மட்டும் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். எச்.ராஜாவை போலீசார் கைது செய்யாவிட்டால் நாங்களே அவரை பிடித்து போலீசில் ஒப்படைக்கும் நிலை ஏற்படும்.

    தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. பதவியை காப்பாற்றி கொள்ளவே முனைப்பாக உள்ளது. தமிழக அரசின் சுகாதாரதுறை, மின்துறை உள்ளிட்ட பல துறைகளில் ஊழல் புகார்கள் கூறப்படுகின்றன. இந்த ஊழல் முறைகேடுகளை கண்டித்து மக்களை திரட்டி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆட்சி செய்ய முடியாது என்று டி.டி.வி. தினகரன் கூறி வருவது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் பேசினார். #HRaja #Balakrishnan
    Next Story
    ×