search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது
    X

    நெல்லை மாவட்டத்தில் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. #papanasamdam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென் மேற்கு பருவமழை காரண மாக கடந்த வாரம் கனமழை கொட்டியது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு அணைகள் தவிர மீதமுள்ள 9 அணைகளும் நிரம்பியது.

    பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லை. செங்கோட்டை, குண்டாறு மலைப் பகுதியில் மட்டும் சிறிய அளவில் சாரல் மழை பெய்து வருகிறது. குண்டாறு அணை பகுதியில் இன்று காலை வரை ஒரு நாள் மழை அளவு 9 மில்லி மீட்டர் ஆகும். அடவி நயினார் அணை பகுதியில் 5 மில்லி மீட்டரும், கடனாநதி, செங்கோட்டை நகர பகுதிகளில் 1 மில்லி மீட்டர் மழையும் இன்று காலை வரை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் இன்று முற்றிலும் மழை குறைந்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2555 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து கால்வாய்களில் வினாடிக்கு 436 கனஅடி தண்ணீரும், கீழ் அணையில் இருந்து வினாடிக்கு 2396 கனஅடி தண்ணீர் ஆற்றிலும் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று காலை 141.80 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணைக்கு வினாடிக்கு 3084 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2593 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இன்று 146.09 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 445 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 55 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 84.55 அடியாக உள்ளது. கடனாநதி அணை யில் 83 அடி தண்ணீரும், ராமநதி அணையில் 82.50 அடியும், கருப்பாநதி-70.21, குண்டாறு-36.10, வடக்கு பச்சையாறு-19, நம்பி யாறு-20.60, கொடு முடியாறு-52.50, அடவி நயினார்-132.22 அடி தண்ணீரும் உள்ளது.

    அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் வெள்ளம் குறைந்தது. #papanasamdam

    Next Story
    ×