search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்த காட்சி.
    X
    மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்த காட்சி.

    தண்ணீர்வரத்து குறைந்தது - குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

    ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும் தண்ணீர் வரத்து சற்று குறைந்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். #courtallam
    தென்காசி:

    குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தொடங்கும் சீசன் ஆகஸ்டு மாதம்வரை இருக்கும். இந்த ஆண்டு சீசனும் 2 மாதத்திற்கும் மேலாக களை கட்டியுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக சீசனை அனுபவித்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மலைப்பகுதியில் மழை நின்று வெயில் அடிக்க தொடங்கியது. இதனால் அணைகளில் நீர்மட்டம் சரிய தொடங்கியது. குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் குறைந்தது. இதனிடையே கடந்த 3 நாட்களாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் கன மழை பெய்ய தொடங்கியுள்ளது.

    இதனால் அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மழை தூறிக் கொண்டே இருந்தது. பிரதான பாசன அணையான பாபநாசம் அணை குற்றாலம் அருவிகளில் கடந்த 2 நாட்களாக அதிகளவு தண்ணீர் வந்தது. இதனால் மெயினருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    நேற்று குற்றாலம் மலைப் பகுதியில் கன மழை பெய்ததால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க எல்லா அருவிகளிலும் தடை விதிக்கப்பட்டது. அருவிக்கரைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். தொடர்ந்து மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் ஆறுகளிலும் அதிகளவு தண்ணீர் வந்தது.

    இந்நிலையில் இன்று குற்றாலம் மலைப்பகுதியில் மழை குறைந்தது. எனினும் மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தது. இன்று ஆடி அமாவாசை என்பதால் மெயினருவியில் குளிக்கவும், தர்ப்பணம் செய்யவும் ஏராளமானோர் குவிந்தனர்.

    இதைத்தொடர்ந்து அருவிகளில் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டது. இதேபோல ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும் தண்ணீர் வரத்து சற்று குறைந்தது. இதையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று விடுமுறை நாள் என்பதாலும், ஆடி அமாவாசை என்பதாலும் அருவிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. #courtallam


    Next Story
    ×