search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மர்ம நபர்கள் கொல்வதுபோல கனவு - அரசு ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்த வாலிபர்
    X

    மர்ம நபர்கள் கொல்வதுபோல கனவு - அரசு ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்த வாலிபர்

    மர்ம நபர்கள் கொல்வதுபோல கனவு கண்டு அய்யோ என்று கூறி கொண்டே அரசு ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #youthinjured

    சேலம்:

    விழுப்புரம் மாவட்டம் சின்னச்சேலம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் மன்சூர்(வயது 23). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது கம்புகள் நட்டு அதில் ஏறி நின்று கட்டுமான பணி செய்து கொண்டிருந்தபோது, கம்புகள் சரிந்து கீழே விழுந்தார். இதில் மன்சூருக்கு இடது கை முறிந்தது.

    இதையடுத்து கடந்த 19-ந்தேதி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மன்சூர் சேர்ந்தார். இங்கு அவர் 2-வது தளத்தில் உள்ள உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    வழக்கம்போல் நேற்று இரவு டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1.30 மணிக்கு மர்ம நபர்கள் தன்னை அடிப்பது போல், வெட்டுவது போல் கனவு கண்டு அய்யோ, அம்மா என மன்சூர் அலறினார்.

    சத்தத்தை கேட்டு பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் கண் விழித்து பார்த்தனர். ஆனால் மன்சூர் தூக்கத்தில் கனவு கண்டபடி தொடர்ந்து யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஓரு கட்டத்தில் என்னை கொல்லுறாங்க.. கொல்லுறாங்க என கூறிக் கொண்டு 2-வது தளத்தில் இருந்து கீழே குதித்தார்.

    இதில் அவர் அதிர்ஷ்டவசமாக முதல் தளத்தில் உள்ள சிலாப்பில் விழுந்து தங்கியதால் உயிர் தப்பினார். இதில் அவருக்கு இடுப்பு எழும்பு, முதுகு தண்டு, தண்டுவடம் உள்ளிட்ட இடங்களில் பலத்த அடிப்பட்டது. இதை பார்த்து மற்ற நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் டாக்டர்கள் வந்து படுகாயம் அடைந்த மன்சூரை மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    Next Story
    ×