என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு வெளியேறுவதாக வந்த தகவலால் அதிகாரிகள் ஆய்வு - சந்தீப் நந்தூரி
Byமாலை மலர்17 Jun 2018 1:19 PM GMT (Updated: 17 Jun 2018 1:44 PM GMT)
ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்படுவதாக வெளியான தகவலை அடுத்து அங்கு அதிகாரிகள் குழு ஆய்வு செய்வதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #Sterlite
தூத்துக்குடி :
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் 100-வது நாள் கலவரம் வெடித்தது, கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆலையில் ரசாயன கசிவு ஏற்ப்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் குழு ஸ்டெர்லைட் ஆலையில் கசிவு குறித்து ஆய்வு செய்ய உள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, சார் ஆட்சியர் தலைமையில் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் காவல்துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு மாலை முதல் ஆலையில் ஆய்வு செய்து வருகிறது.
ஆலையில் ரசாயன கசிவு உள்ளதாக வதந்திகள் பரவக்கூடாது என்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Sterlite

Next Story
×