என் மலர்

  செய்திகள்

  மயிலாடுதுறை பயணிகள் ரெயில் 21 நாட்கள் ரத்து
  X

  மயிலாடுதுறை பயணிகள் ரெயில் 21 நாட்கள் ரத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ரெயில்வே பணியின் காரணமாக ரெயில் போக்குவரத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.#Mayiladuthurai #passengertrain
  திருச்சி:

  அதன்படி திருச்சி-தஞ்சை இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் (வ.எண் 76824/76827) இரு மார்க் கத்திலும் இன்றும், வருகிற 12, 19, 26 ஆகிய 4 நாட்களும், மயிலாடுதுறை-திருச்சி பயணிகள் ரெயில் (வ.எண் 16233/16234) இரு மார்க்கத்திலும் வருகிற 11-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 21 நாட்களும் ரத்து செய்யப்படுகிறது. திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (வ.எண் 56824) இன்று முதல் 31-ந்தேதி வரை 27 நாட்களுக்கு கும்ப கோணம்- மயிலாடுதுறை இடையே இயக்கப்படாது.

  திருச்சி-நாகூர் பயணிகள் ரெயில் (வ.எண் 76854) நீடாமங்கலத்தில் வருகிற 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 15 நிமிடம் தாமதமா கும். காரைக்கால்-திருச்சி பயணிகள் ரெயில் (வ.எண் 56711) 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 30 நிமிடம் தாமதமாகும். மேற்கண்ட தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Mayiladuthurai #passengertrain
  Next Story
  ×