என் மலர்

  செய்திகள்

  சூலூர் அருகே கார் மரத்தில் மோதி வங்கி ஊழியர்-மகன் பலி
  X

  சூலூர் அருகே கார் மரத்தில் மோதி வங்கி ஊழியர்-மகன் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சூலூர் அருகே கார் மரத்தில் மோதி வங்கி ஊழியர் அவரது மகன் பலியானார்கள். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சூலூர்:

  திருவண்ணாமலையை சேர்ந்தவர் திரிலோக சந்தர் (45). கோவையில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வந்தார்.நீலாம்பூர் சின்னியம் பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று காலை திரிலோக சந்தர் தனது மனைவி எழிலரசி, மகள் சிவானி (9), மகன் டேனியல் (6) ஆகியோருடன் காரில் வந்தார்.

  இன்று காலை 6.30 மணிக்கு கார் சூலூர் பிரிவு குரும்பபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் இருந்த புளிய மரத்தில் மோதியது.

  இந்த விபத்தில் திரிலோக சந்தர் ,அவரது மகன் டேனியல் ஆகியோர் சம்பவ இடத்திலே பலியானார்கள். எழிலரசி, அவரது மகள் சிவானி அகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

  விபத்து குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

  Next Story
  ×