என் மலர்

  செய்திகள்

  பாவூர்சத்திரத்தில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது பொதுமக்களிடம் சிக்கிய போலீஸ் ஏட்டு
  X

  பாவூர்சத்திரத்தில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது பொதுமக்களிடம் சிக்கிய போலீஸ் ஏட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு ஒருவர் பெண்ணிடம் உல்லாசமாக இருந்தபோது சிக்கியதாக வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவும் ஒரு வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  நெல்லை:

  வளர்ந்து வரும் நாகரீக உலகில் வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மிக முக்கியமானதாகிவிட்டன. இதன்மூலம் பல நல்ல விசயங்களும் நடக்கின்றன. சில நேரங்களில் தவறான தகவல்கள், வதந்திகளும் கூட இவை மூலமாக பரவிவிடுகின்றன. சில சாதாரண சம்பவங்களும் இவை மூலம் பெரிதாக்கபட்டு விடுகின்றன. ஜல்லிக்கட்டு போராட்டம் போன்றவை சமூக வலைதளங்களால்தான் மக்கள் மத்தியில் எளிதில் சென்றடைந்தன.

  இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு ஒருவர் பெண்ணிடம் உல்லாசமாக இருந்தபோது சிக்கியதாக வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவும் ஒரு வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் அவர் குடும்ப விவகாரம் தொடர்பாக பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்துள்ளார். அப்போதுதான் அந்த ஏட்டின் அறிமுகம் அவருக்கு கிடைத்துள்ளது.

  அவர் அந்த பெண்ணிடம் செல்போன் எண்ணை வாங்கியுள்ளார். பின்னர் அடிக்கடி போனில் இனிமையாக பேசியுள்ளார். நாளடைவில் அவர்களது பேச்சும், செயலும் எல்லை மீறி போனது. அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருக்கும் அளவுக்கு நெருக்கமாகிவிட்டனர்.

  ஏட்டு அங்கு வந்துசெல்வது அப்பகுதியை சேர்ந்த சிலருக்கு தெரியவந்தது. அவர்கள் ஏட்டையாவை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். சம்பவத்தன்று ஏட்டு அந்த வீட்டுக்குள் சென்று அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும்போது சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். இருவரும் அரைகுறை ஆடையுடன் நிற்பதும், அவர்களை பொதுமக்கள் கண்டித்து திட்டுவதும், அதற்கு ஏட்டும், அந்த பெண்ணும் தங்களை விட்டு விடுமாறு கெஞ்சுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

  இந்த வீடியோ விவகராம் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் சென்றது. இதுபற்றி ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பாவூர்சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×