என் மலர்

  செய்திகள்

  இளம்பெண்ணை லாட்ஜில் அடைத்து வைத்து நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த வாலிபர்
  X

  இளம்பெண்ணை லாட்ஜில் அடைத்து வைத்து நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த வாலிபர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் காதல் போர்வையில் இளம்பெண் கற்பை நண்பர்களுடன் சேர்ந்து சூறையாடிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

  சேலம்:

  தர்மபுரியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை அருகில் இருந்து கவனித்து வந்தார். அப்போது சேலத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்தும், செல்போனில் பேசியும் வந்தனர்.

  அப்போது அந்த வாலிபர், இளம்பெண்ணிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார். அதனை நம்பிய அந்த பெண்ணும் அவருடன் நெருங்கி பழகி வந்தார்.

  இதையடுத்து அந்த வாலிபர், இளம் பெண்ணை சுற்றுலா தலம் உள்பட பல்வேறு இடங்களுக்கும் அழைத்து சென்றார். அப்போது அந்த வாலிபரின் 2 நண்பர்களும் உடன் சென்றதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள ஒரு லாட்ஜிக்கு அந்த பெண்ணை வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த இளம்பெண்ணை 3 பேரும் மாறி, மாறி மிரட்டி கற்பழித்ததாக கூறப்படுகிறது.

  இளம்பெண் அடைக்கப்பட்டிருந்த லாட்ஜிக்கு இளைஞர்கள் அடிக்கடி வந்து செல்வதை பார்த்த சிலர் சந்தேகம் அடைந்து விசாரித்த போது இந்த பரபரப்பு தகவல்கள் வெளியானது.

  இதனால் அதிர்ச்சி அடைந்த சேலத்தை சேர்ந்த ஒரு அமைப்பினர் அறையில் தனியாக இருந்த அந்த இளம்பெண்ணை மீட்டு அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் விசாரித்த போது லாட்ஜ் அறையில் அடைத்து வைத்து தன்னை 3 பேர் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

  இது தொடர்பாக சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி அழைத்து சென்ற வாலிபர் ஏற்கனவே பல பெண்களை இதே போல திருமண ஆசை காட்டி அழைத்து சென்று கற்பை சூறையாடியது தெரிய வந்துள்ளது.

  இதையடுத்து அவர்களை பிடிக்க கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் 3 தனிப்படை அமைத்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள அவரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

  அவரை பிடித்தால் அவரது நண்பர்கள் 2 பேரும் அடையாளம் தெரிந்து விடும் என்பதால் அவரை கைது செய்யும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

  இளம்பெண் கற்பை நண்பர்களுடன் சேர்ந்து சூறையாடியதாக புகார் கூறப்படும் வாலிபர் சிக்கினால் மேலும் பல தகவல்கள் அம்பலமாகும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  Next Story
  ×