என் மலர்

  செய்திகள்

  கோடை விடுமுறையால் மெட்ரோ ரெயிலில் தினமும் 6 ஆயிரம் பேர் பயணம்
  X

  கோடை விடுமுறையால் மெட்ரோ ரெயிலில் தினமும் 6 ஆயிரம் பேர் பயணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோடை விடுமுறையால் மெட்ரோ ரெயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தினமும் பயணம் செய்வோர் எண்ணிக்கை 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. #MetroTrain

  சென்னை:

  சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

  கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர் மட்டப் பாதையிலும், திருமங்கலம்-நேரு பூங்கா வரை சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

  பயணிகளிடையே மெட்ரோ ரெயில் சேவைக்கு பெரிதும் வரவேற்பு ஏற்பட்டுள்ளதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் போக்கு வரத்தை விரிவுபடுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

  நேரு பூங்கா-சென்ட்ரல் வரையிலான சுரங்க பணிகள் முடிந்துள்ளது. தற்போது இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

  சைதாப்பேட்டை- தேனாம்பேட்டை வரையிலான சுரங்கப்பணிகளும் நிறைவடைந்துள்ளன.

  நேரு பூங்கா-சென்ட்ரல், சைதாப்பேட்டை-தேனாம்பேட்டை வழித்தடங்களில் வருகிற மே மாதம் இறுதிக்குள் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளில் மெட்ரோ நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

  இந்த நிலையில் கோடை விடுமுறையால் மெட்ரோ ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழகிறது. தினமும் 6 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகிறார்கள்.

  தென் மாவட்டங்களில் இருந்து கோடை விடுமுறைக்கு சென்னைக்கு வந்தவர்கள் மெட்ரோ ரெயிலை பார்ப்பதற்கும் சுரங்க ரெயிலில் பயணம் செய்யவும் மிகவும் ஆர்வப்படுகின்றனர். இதனால் மெட்ரோ ரெயிலில் பயணிகள் கூட்டம் தினமும் அலைமோதுகிறது.

  கோடை விடுமுறையையொட்டி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் மக்கள் ‘செல்பி’, போட்டோக்கள் எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.

  இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

  கோடை விடுமுறையால் மெட்ரோ ரெயிலில் தற்போது பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது. தினமும் 6 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகிறார்கள்.

  கடந்த மாதம் தினமும் 4 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். தற்போது கோடை விடுமுறையால் சென்னைக்கு சுற்றுலா வந்துள்ள வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மெட்ரோ ரெயிலை பார்ப்பதற்கும், அதில் ஏறி ‘குளு குளு’ பயணம் செய்வதற்கும் மிகவும் ஆர்வமாக வருகிறார்கள். இதனால் மெட்ரோ ரெயிலில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain

  Next Story
  ×