search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    இடிந்தகரையில் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி.
    X
    இடிந்தகரையில் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி இடிந்தகரையில் 4 ஆயிரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி இடிந்தகரையில் 4 ஆயிரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வள்ளியூர்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

    இந்நிலையில் நெல்லை மாவட்டம் இடிந்தகரை மற்றும் சுற்று வட்டார மீனவ கிராம மக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், குமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம அமைவதை கண்டிப்பது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 4000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கூறுகையில், காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகிறது. டெல்டா மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பல்வேறு கொடிய நோய்கள் வர வாய்ப்புள்ளது. எனவே இந்த ஆலையை மூட வேண்டும் என்றனர்.


    Next Story
    ×