search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்தியால் குத்தப்பட்ட மாணவன்
    X
    கத்தியால் குத்தப்பட்ட மாணவன்

    களக்காட்டில் இன்று பள்ளி வகுப்பறையில் மாணவனுக்கு கத்திக்குத்து

    களக்காட்டில் அரசு மேல்நிலைப்பள்ளியில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு மாணவனை கத்தியால் குத்திவிட்டு மற்றொரு சிறுவன் தப்பி ஓடினான். தப்பியோடிய மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு மீனவன்குளத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகன் கண்ணன் (வயது14). இவன் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். அதே வகுப்பில் களக்காடு மேலபத்தையை சேர்ந்த நியூட்டன் மகன் சேன்ஸ்சியோஸ் (14) என்பவனும் படித்து வருகிறான்.

    கண்ணன் வகுப்பு மாணவர் தலைவனாக உள்ளார். இதில் கண்ணனுக்கும், சேன்ஸ்சியோசுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளி வகுப்பறை செயல்பட்டு கொண்டிருந்தது. அப்போது திடீரென கண்ணனுக்கும், சேன்ஸ்சியோசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த சேன்ஸ்சியோஸ், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணனை சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடி விட்டான். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த களக்காடு போலீசார், படுகாயம் அடைந்த மாணவன் கண்ணனை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய மாணவன் சேன்ஸ்சியோஸசை தேடி வருகின்றனர்.  #tamilnews

    Next Story
    ×