என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டு படகில் செல்ல அனுமதி இல்லை
Byமாலை மலர்22 Feb 2018 3:32 PM IST (Updated: 22 Feb 2018 3:32 PM IST)
கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப் படகில் செல்ல இந்த ஆண்டு அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது.
மதுரை:
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு தமிழகத்தில் இருந்து மோட்டார் பொருத்திய நாட்டு படகில் செல்வதற்கு அனுமதி வழங்க கோரி ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். மீன்பிடி படகுகளில் கச்சத்தீவுக்கு செல்ல சட்டத்தில் அனுமதிக்கவில்லை என்று கூறிய நீதிபதிகள், படகில் செல்லும்போது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் விபத்து இழப்பீடு வழங்க இயலாது என்றும் கூறினர்.
இந்நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு குறுகிய நாட்களே இருப்பதால் இந்த ஆண்டு மோட்டார் பொருத்திய நாட்டுப் படகில் செல்வதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
2019-ம் ஆண்டு முதல் நாட்டுப்படகில் கச்சத்தீவு செல்ல அனுமதி அளிக்க உத்தரவிட்டனர். இந்தியா - இலங்கை இடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி, அந்தோணியார் கோவில் விழாவிற்கு செல்வதற்கு போக்குவரத்து ஆவணங்கள் எதுவும் தேவையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்து, மீனவர்கள் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் நாளையும் நாளை மறுதினமும் திருவிழா நடைபெறுகிறது. இந்தியாவில் இருந்து 2000 பேர் திருவிழாவில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews

Next Story
×