search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பிளஸ்-2 மாணவன் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி: மாணவியும் வி‌ஷம் குடித்தார்
    X

    பிளஸ்-2 மாணவன் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி: மாணவியும் வி‌ஷம் குடித்தார்

    வாணியம்பாடி அரசு பள்ளி பிளஸ்-2 மாணவி நேற்று தற்கொலைக்கு முயன்ற நிலையில் இன்று அதே பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவன் வகுப்பறைக்குள் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வள்ளிப்பட்டு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 17) என்ற மாணவன் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இன்று காலை மாணவன் பிரபாகரன் வழக்கம் போல் சீருடையில் பள்ளிக்கு சென்றார். வகுப்பறைக்குள் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்த நேரத்தில் மாணவன் பிரபாகரன் பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த வி‌ஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    வாயில் நுரை தள்ளி மயக்கமடைந்த மாணவனை சகமாணவர்கள், ஆசிரியர்கள் உதவியுடன் மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு மாணவனின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்கு மாணவன் பிரபாகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவன் தற்கொலைக்கு முயன்ற இதே பள்ளியில் வள்ளிப்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவி திலகவதி என்பவர் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த மாணவி நேற்று மாலை பள்ளி நேரம் முடிந்து தனது வீட்டிற்கு சென்றார்.

    வீட்டில் ஏதோ ஒரு விவகாரம் தொடர்பாக பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி திலகவதி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

    அந்த மாணவியை பெற்றோர் மீட்டு வாணியம் பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட மாணவி திலகவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஒரே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் மாணவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2 சம்பவம் தொடர்பாகவும் வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×