என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன்னிப்பு கோரினார் நித்தியானந்தா: மதுரை ஆதீனமாக அறிவித்ததை திரும்ப பெறுவதாக ஐகோர்ட்டில் மனு
Byமாலை மலர்6 Feb 2018 10:39 AM GMT (Updated: 6 Feb 2018 10:39 AM GMT)
மதுரை ஆதீனமாக அறிவித்ததை திரும்ப பெறுவதாக கூறி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ள நித்தியானந்தா, தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
சென்னை:
மதுரை ஆதீனத்தின், 293-வது ஆதீனமாக நித்யானந்தா தன்னைத்தானே அறிவித்துக்கொண்டதை எதிர்த்து ஐகோர்ட்டு மதுரை கிளையில், மதுரையைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மதுரை ஆதீனத்துக்குள் செல்ல நித்யானந்தாவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கிற்கு நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘நான் மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி. கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதி இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டேன். ஒருமுறை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டால், அவர் வாழ்நாள் முழுவதும் இளைய ஆதீனமாகவே தொடர்வார். அந்த நியமனத்தை எவராலும் ரத்துசெய்ய முடியாது’ என்று கூறியிருந்தார்.
இந்த பதில் மனுவில், 293-வது ஆதீனம் என்று குறிப்பிட்டதை திரும்பப் பெற்றுக் கொண்டு, புதிய பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். ஏன் என்றால், 292-வது ஆதீனம் இருக்கும்போது, 293-வது ஆதீனம் என்று எப்படி குறிப்பிட முடியும்? என்று ஐகோர்ட்டு கேள்வி கேட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு கடந்த மாதம் 29-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய நித்யானந்தா தரப்பு வக்கீல் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டார். இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
‘பதில் மனுவை தாக்கல் செய்யாமல், இழுத்தடிக்கும் நித்யானந்தாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிடுவேன்’ என்றும் எச்சரிக்கை செய்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 293-வது குரு மகாசன்னிதானம் என்று அறிவித்துக் கொண்டதை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிவித்துக் கொண்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்’ என்று கூறியிருந்தார். இந்த பதில் மனுவை நீதிபதி மகாதேவன் ஏற்றுக் கொண்டார்.
பின்னர், ‘இனிமேல் மதுரை ஆதீனத்துக்குள் நுழைய மாட்டேன் என்றும் ஆதீனம் தொடர்பான எந்த விவகாரத்திலும் தலையிட மாட்டேன் என்றும் நித்யானந்தா உத்தரவாதம் அளிக்க தயாராக உள்ளாரா? அவ்வாறு தயாராக இருந்தால், அந்த உத்தரவாதத்தை அளித்து புதிய பிரமாண மனுவை அவர் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதி கருத்து தெரிவித்து வழக்கு விசாரணையை 26-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். #Tamilnews

Next Story
×