என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துணைவேந்தருக்கு லஞ்சம்: 76 பேராசிரியர்களிடம் விரைவில் விசாரணை
Byமாலை மலர்6 Feb 2018 7:10 AM GMT (Updated: 6 Feb 2018 7:10 AM GMT)
பேராசிரியர் பணி நியமனங்களில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படாததால் 76 பேராசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கோவை:
பேராசிரியர் பணி நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
துணைவேந்தருக்கு இடைத்தரகராக செயல்பட்ட தொலைதூர கல்வி மைய இயக்குனர் மதிவாணன் மீது வழக்குபதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துணைவேந்தர் கணபதி உயர் கல்வித்துறை செயலாளரின் தடையையும் மீறி கடந்த 2016-ம் ஆண்டில் 76 பணியிடங்களை நிரப்பி உள்ளார். இந்த பணியிடங்களுக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை லஞ்சம் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
பல்கலைக்கழக விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் பணியிடங்களை நிரப்பி உள்ளனர். குறிப்பாக பணி நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய பணி இடங்கள் ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கவர்னர், உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலாளருக்கு அடுக்கடுக்கான புகார்கள் குவிந்தன.
இதையடுத்து 2016-ம் ஆண்டு துணைவேந்தர் கணபதியால் நிரப்பப்பட்ட அனைத்து பேராசிரியர் பணியிடங்களின் தகுதிகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்பிக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட பேராசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
துணைவேந்தர் கணபதி மீது அடுக்கடுக்கான லஞ்ச புகார்கள் எழுந்ததையடுத்து அரசு உத்தரவின்பேரில் கடந்த 6 மாதத்திற்கு முன்பே ரகசிய விசாரணையில் இறங்கினோம். 2016-ம் ஆண்டு பணி நியமனத்தில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அனைத்து பணியிடங்களுக்குமே லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூற முடியாது.
தற்போது புகார் கொடுத்திருக்கும் பேராசிரியர் சுரேஷ் பி.எச்.டி. முதுகலை படிப்பு முடித்திருக்கிறார். தென் கொரியாவில் ஆராய்ச்சி நிறுவனத்தில் சில காலம் பணியாற்றி உள்ளார். பெங்களூர், மும்பை உள்ளிட்ட இடங்களில் கல்வி நிறுவனங்களில் 6 ஆண்டு பணியாற்றிய அனுபவம் உள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில் இவர் பணிக்கு தேர்வாகி கடந்த 2 ஆண்டாக பணியாற்றி வருகிறார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் இவர் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அதற்காக தான் சுரேசிடம் ரூ.40 லட்சம் பேரம் பேசி உள்ளனர். இதில் துணைவேந்தருக்கு பேராசிரியர் தர்மராஜ், தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன் ஆகியோர் இடைத்தரகர்களாக பேசி பணத்தை கேட்டு அடிக்கடி போனில் பேசி தொந்தரவு செய்துள்ளனர்.
இதனால் வெறுப்படைந்து சுரேஷ் புகார் செய்துள்ளார். இவருக்கு உதவிபேராசிரியர் பணி நியமனத்துக்கான தகுதிகள் சரியாக உள்ளது.
ஆனால் பல நியமனங்களில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை. இது குறித்த புகார்களின் பேரில் 76 பேராசிரியர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். அப்போது அவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீவிரமாக ஆய்வு செய்யப்படும்.
இதுதவிர துணைவேந்தருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், தொலைதூர கல்வி மைய அதிகாரிகள் என பலர் மீது புகார்கள் வந்துள்ளன. அதன்பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.
பேராசிரியர் பணியிடங்கள் தவிர பல்கலைக்கழகத்தில் துப்புரவு பணியாளர்கள், ஊழியர்கள், அலுவலர்கள் என கடந்த 2 வருடங்களில் மட்டும் 250 பணியிடங்களை நிரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. முழு விசாரணையும் முடிந்த பிறகு அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
துணைவேந்தர் கணபதிக்கு லஞ்சம் கொடுத்தவர்களில் சிலர் காசோலைகளாக கொடுத்துள்ளனர். ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு ஆன்லைன் மூலம் பரிவர்த்தனைக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன.
இதை பயன்படுத்தி துணைவேந்தர் கணபதி 60 பேரிடம் இருந்து ஆன்லைன் மூலம் (ஆர்.டி.ஜி.எஸ். முறையில்) பண பரிவர்த்தனை செய்து லஞ்ச பணத்தை பெற்றிருப்பதும் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பான வங்கி ஆவணங்களை சேகரித்து உள்ளனர். இவற்றை இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக சேர்க்க உள்ளனர்.
துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டு நள்ளிரவில் லஞ்ச வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஜான் மினோ முன்பு ஆஜர்படுத்தப்பட்ட போது, இருவரும் தங்களை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி வக்கீல் மூலம் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீது இன்று விசாரணை நடக்கிறது. #tamilnews

Next Story
×