search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    நெல்லை அருகே புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை: கணவர், மாமியாரிடம் விசாரணை
    X

    நெல்லை அருகே புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை: கணவர், மாமியாரிடம் விசாரணை

    நெல்லை அருகே புதுப்பெண் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த சம்பவம் குறித்து அவரது கணவர், மாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளம் சுபாஷ் சந்திரபோஸ் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி இசக்கி மாலதி(வயது26). இவர்களுக்கு கடந்த 8 மாதத்துக்கு முன்புதான் திருமணம் ஆனது. இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இசக்கி மாலதி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுபற்றி மேலப்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இசக்கி மாலதி தூக்குபோட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

    இசக்கிமாலதிக்கு திருமணம் ஆகி 8 மாதமே ஆவதால் அவரது சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா என்று நெல்லை ஆர்.டி.ஓ மைதிலி விசாரணை நடத்துகிறார். இது தொடர்பாக இசக்கிமாலதியின் கணவர் பால்ராஜ், மாமியார் சரஸ்வதி ஆகியோரிடமும் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews

    Next Story
    ×