என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
9-ம் தேதி முதல் உண்ணாவிரதம்: பட்டாசு உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
Byமாலை மலர்6 Jan 2018 1:50 PM IST (Updated: 6 Jan 2018 2:59 PM IST)
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டாசு உற்பத்தியாளர்கள் வரும் 9-ம் தேதி முதல் உண்ணவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சிவகாசி:
சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக் கோரி சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 12-வது நாளாக இன்றும் வேலைநிறுத்தம் தொடர்கிறது.
இந்நிலையில் சிவகாசியில் இன்று அனைத்து பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கோரிக்கையை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் பட்டாசு உற்பத்திக்கு உள்ள அச்சம் நீங்கும்வரை பல்வேறு வடிவங்களில் போராட்டம் தொடரும் என்றும் பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, பட்டாசு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும் என சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
Next Story
×