என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரி அருகே பள்ளி மாணவி மர்ம மரணம்
Byமாலை மலர்24 Nov 2017 10:35 AM GMT (Updated: 24 Nov 2017 10:35 AM GMT)
தர்மபுரி அருகே பள்ளி மாணவி மர்மமான முறையில் ஆற்றங்கரையோரம் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகாவுக்குட்பட்ட திருச்சாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வஜ்ரம். இவரது மகள் லெட்சுமி (வயது 14). இவர் கம்பை நல்லூர் அரசு பெண்கள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல வீட்டில் இருந்து லெட்சுமி பள்ளிக்கு புறப்பட்டு சென்றார்.
ஆனால் மாலை வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் திருச்சாகவுண்டம்பட்டி அருகில் உள்ள முள்ளனூர் ஆற்றின் கரையில் மாணவி ஒருவர் பள்ளி சீருடையுடன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே கிருஷ்ணாபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தது மாயமான மாணவி லெட்சுமி என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதற்கிடையே அங்கு வந்த உறவினர்கள் லெட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர்.
பின்னர் லெட்சுமியின் உடலை மீட்டு போலீசார் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் பிறகு தான் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்பது தெரியவரும்.
பள்ளிக்கு சென்ற மாணவி அங்கு ஏன் சென்றார், அவரை யாராவது கடத்தி சென்று கொலை செய்தார்களா? அல்லது மாணவியே தற்கொலை செய்து கொண்டாரா? என்பது மர்மமாக உள்ளது.
இதற்கிடையே மாணவி அந்த ஆற்றங்கரையில் பிணமாக கிடப்பதாக தகவல் தெரிவித்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி சாவுக்கும், அந்த வாலிபருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரைணை தீவிரப்படுத்தி உள்ளனர். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Next Story
×