search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனநாயகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி: பாலபாரதி ஆவேசம்
    X

    ஜனநாயகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி: பாலபாரதி ஆவேசம்

    திண்டுக்கல்லில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ் நிலையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பாண்டி, செயற்குழு உறுப்பினர் கல்யாண சுந்தரம், நிர்வாகிகள் குமரவேல், கருப்பசாமி, ஆசாத், அஜய்கோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்து கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    அதன் பிறகு பாலபாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் நேற்று கம்யூனிஸ்டு கட்சியின் கொடியினை பா.ஜனதா ஆதரவாளர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதன் அருகிலேயே பா.ஜனதா மாநில அலுவலகம் உள்ளது. எனவே அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தூண்டுதலின் பேரில் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள் இது போன்ற அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தில் வன்முறையை தூண்டி அதன் மூலம் தமிழகத்தில் காலூன்ற பாரதீய ஜனதா முயற்சி எடுத்து வருகிறது. சுதந்திர போராட்ட காலத்தில் இருந்தே மக்களுக்காக பாடுபடும் இயக்கமாக கம்யூனிஸ்டு உள்ளது. ஆனால் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் ஏதேனும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றது உண்டா? தமிழகத்தில் பா.ஜனதாவால் ஒரு போதும் ஆட்சியை அமைக்க முடியாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×