search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் சூழல் உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
    X

    தமிழகத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் சூழல் உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

    தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றால் பா.ஜனதா வெற்றி பெறும் சூழல் உள்ளது என்று மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றால் அதில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் முகாந்திரம் உள்ளது. சென்னையில் மழைவெள்ளத்தில் பொதுமக்கள் பாதிக்காதவகையில் தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

    வானிலை ஆய்வு மையம் உடனுக்குடன் தரும் தகவலின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2015-ம் ஆண்டு மழைவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு போன்று இப்போது இருக்காது.

    தமிழக அரசு ரே‌ஷன் கடையில் வழங்கப்படும் சர்க்கரையின் விலையை உயர்த்தி உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள், வறுமைகோட்டுக்குகீழ் உள்ளவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். வாங்கும் சக்தி உள்ள வசதி படைத்தவர்களுக்குதான் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு அறிவித்த நாளை கருப்பு தினமாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்த பாமரரும், தொழிலாளர்களும் பாதிக்கப்படவில்லை. கருப்பு பணம் வைத்திருந்தவர்கள், பதுக்கல்காரர்கள், கள்ளப்பணம் வைத்திருந்தவர்கள்தான் பாதிக்கப்பட்டனர்.

    அவர்கள்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு நினைவுதினத்தை அனுசரிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×