search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செவ்வாய்ப்பேட்டை அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்
    X

    செவ்வாய்ப்பேட்டை அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்

    செவ்வாய்ப்பேட்டை அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் புகுந்த கொள்ளை மர்மகும்பல் மோட்டார் சைக்கிளை எரித்து தப்பி ஓடினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செவ்வாப்பேட்டை:

    செவ்வாப்பேட்டையை அடுத்த தொழுவூர் துர்க்கை அம்மன் நகரில் வசித்து வருபவர் இளமாறன். ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். நேற்று இரவு அவர் குடும்பத்துடன் தூங்கினார்.

    நள்ளிரவில் வந்த மர்மகும்பல் அப்பகுதியில் உள்ள தெருவிளக்குகளில் மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் இளமாறன் வீட்டு சுவரை தாவிக் குதித்தனர்.

    சத்தம் கேட்டு எழுந்த இளமாறன் வீட்டு முன்பு கொள்ளையர்கள் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே கொள்ளையர்கள் அங்கிருந்த மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    உடனடியாக மோட்டார் சைக்கிளில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. எனினும் வாகனத்தின் பின் பகுதி சேதம் அடைந்தது.

    இதே வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொள்ளை நடந்தது. தற்போது மீண்டும் மர்ம கும்பல் கைவரிசை காட்ட வந்து இருக்கிறது. கொள்ளை கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×