என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
இரு அணிகளும் இணைந்து செயல்படுவதில் எந்த சிக்கலும் இருக்காது: செம்மலை எம்.எல்.ஏ.
Byமாலை மலர்8 Sept 2017 10:04 AM IST (Updated: 8 Sept 2017 10:04 AM IST)
எங்கள் அணியை சேர்ந்த முன்னாள், இந்நாள் பொறுப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் அவர்களுடன் இணைந்து செயல்படுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று செம்மலை எம்.எல்.ஏ. கூறினார்.
சேலம்:
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்ததற்கு பிறகு கடந்த மாதம் 27-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்திற்கு வந்தார்.
அப்போது ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த செம்மலை எம்.எல்.ஏ. முதல்-அமைச்சரை சந்திக்கவில்லை. அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் உள்ள அவர் தினகரன் அணிக்கு செல்வதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சேலத்திற்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து பேசிய செம்மலை எம்.எல்.ஏ. அந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதற்கிடையே நான் முதல்-அமைச்சரை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன் என்று அவர் கூறியதாக தகவல் பரவியது.
இது குறித்து செம்மலை எம்.எல்.ஏ.விடம் மாலை மலர் நிருபர் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி:- சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் கடந்த 6-ந் தேதி இரவு மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன் என்று நீங்கள் கூறியதாக தகவல் பரவியுள்ளதே?
பதில்:- வருகிற 30-ந் தேதி சேலத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இது தொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் வீட்டில் நடைபெறுவதாகவும், அதில் பங்கேற்குமாறும் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பேரிலேயே நான் முதல்-அமைச்சர் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து அந்த கூட்டத்திலும் பங்கேற்றேன். மற்றபடி மரியாதை நிமித்தமாக நான் அவரை சந்திக்கவில்லை. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி இன்று சேலத்தில் நடைபெறும் கால்கோள் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். அதிலும் நான் பங்கேற்கிறேன்.
கேள்வி:- இரு அணிகளும் இணைந்த போதிலும் நேற்று முன்தினம் முதல்-அமைச்சரை சந்திக்க உங்கள் அணி நிர்வாகிகள் அதிக அளவில் வரவில்லையே ?
பதில்:- எங்கள் அணியை சேர்ந்த முன்னாள், இந்நாள் பொறுப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் அவர்களுடன் இணைந்து செயல்படுவதில் எந்த சிக்கலும் இருக்காது. அங்கீகாரம், உரிய மரியாதை, பொறுப்புகள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும்.
அந்த அங்கீகாரத்தை வாங்கி கொடுக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இரு அணியினரும் முழுமையாக இணைந்து செயல்பட்டால் தான் அந்த இணைப்பு நல்லதாக இருக்கும். வெறுமென இணைந்தோம் என்று சொல்லி கொண்டிருந்தால் போதாது. விரைவில் இணைப்பு முழுமை பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×