search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரம்யா
    X
    ரம்யா

    அரக்கோணம் அருகே தேள் கொட்டி 5 வயது சிறுமி பலி

    அரக்கோணம் அருகே தேள் கொட்டி 5 வயது சிறுமி இறந்த சம்பவம், பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த மின்னல் மேல் களத்தூரை சேர்ந்தவர் முனுசாமி. விவசாயி கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது 2-வது மகள் ரம்யா (வயது 5). அங்குள்ள தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமி ரம்யாவை, கொடிய வி‌ஷம் கொண்ட தேள் கொட்டியது. பெற்றோர், ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ரம்யா நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    தேள் கொட்டி சிறுமி இறந்த சம்பவம், பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


    Next Story
    ×