என் மலர்

  செய்திகள்

  கோவையில் மாடுகளுக்கும் அடையாள அட்டை - தமிழகத்தில் முதல்முறையாக அறிமுகம்
  X

  கோவையில் மாடுகளுக்கும் அடையாள அட்டை - தமிழகத்தில் முதல்முறையாக அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய பால்வள மேம்பாட்டு வாரியம் சார்பில் நாடு முழுவதும் உள்ள மாடுகளுக்கு அடையாள அட்டை (ஹெல்த் கார்டு) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  கோவை:

  தமிழகத்தில் முதல் கட்டமாக கோவை, சேலம், விழுப்புரம், மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இந்த திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  அதன்படி தமிழகத்தில் முதல்முறையாக கோவையில் மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

  இதையொட்டி மாவட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகங்கள், மருத்துவமனைகள், கிளை மருந்தகங்கள் உள்ளிட்ட 105 மையங்கள் மூலமாக இந்த அட்டைகள் வழங்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

  இந்த திட்டத்தின்படி கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் மாடுகளுக்கு அடையாள அட்டை தயார் செய்து வழங்கப்பட உள்ளது.

  இதுபோல் மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்குவதன் மூலம் திருட்டு, மாட்டிறைச்சிக்காக கடத்தப்படுவது போன்றவை தடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  இதுகுறித்து கோவை கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் (பொறுப்பு) கே.ராமச்சந்திரன் கூறியதாவது:-

  நாடு முழுவதிலும் உள்ள மாடுகளுக்கு உடல் நலன், பெருக்கம், நோய்கள் குறித்த விவரங்களை சேகரிக்க ஒவ்வொரு மாட்டுக்கும் 12 இலக்கம் எண் கொண்ட தனித்த அடையாள அட்டை (யு.ஐ.டி.) வழங்கப்பட உள்ளது. இதற்காக பார்க்கோடு கொண்ட பாலியூரித்தேனால் ஆன அட்டை ஒவ்வொரு மாட்டின் காதிலும் பொருத்தப்படும்.

  கலப்பின மாடு, நாட்டு மாடு, எருமை ஆகியவற்றுக்கு 3 தனித்தனியாக வர்ணங்களில் இந்த அட்டை வழங்கப்படும்.

  மேலும் மாட்டின் உரிமையாளருக்கு கைகளில் ஒரு நல அட்டை வழங்கப்படும். அதில் மாட்டின் புகைப்படம், அடையாளங்கள், வயது, அடையாள எண், இனம், சினை ஊசி போட்ட விவரங்கள், எங்கு ஊசி போடப்பட்டது, சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் மாட்டின் கன்றுகள் உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.

  இந்த விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதால் மாநிலம் முழுவதிலும் உள்ள மாடுகளின் விவரங்களை சென்னை மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகளால் உடன டியாக காண முடியும்.

  மேலும் அனைத்து மாடுகளுக்கும் அடையாள அட்டை வழங்கிய பிறகு மாவட்டம் வாரியாக எத்தனை கால்நடைகள் உள்ளன? எத்தனை மாடுகளுக்கு சினை ஊசி போடப்பட்டுள்ளது? எத்தனை மாடுகள் கருவுற்றுள்ளன என்பது போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும்.

  சினை ஊசி போடப்பட்ட மாடுகள் சினை பிடித்துள்ளதா? மீண்டும் எப்போது ஊசி போட வேண்டும் போன்ற விவரங்களை செல்போனிலிலும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் மாட்டின் உரிமை யாளர்களிடம் கேட்டு, வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×