search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை தபால் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்: 15 பெண்கள் உள்பட 45 பேர் கைது
    X

    தலைமை தபால் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்: 15 பெண்கள் உள்பட 45 பேர் கைது

    தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 45 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி. மகேந்திரன் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட செயலாளர் திருஞானம் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன், தஞ்சை மாநகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் விஜயலெட்சுமி, தஞ்சை ஒன்றிய செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும்.விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி. வரியை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.இந்தியை திணிக்க கூடாது. விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.ஹைட்ரோ கார்பன்,மீத்தேன், ஷேல் எரிவாயு எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம்,பேராவூரணி, சேதுபாவா சத்திரம்,பட்டுக்கோட்டை, மதுக்கூர், ஒரத்தநாடு, திருவோணம், கும்பகோணம், திருப்பனந்தாள்,திருவிடை மருதூர்,திருவையாறு, செங்கிப்பட்டி, அம்மாப்பேட்டை, பூதலூர் ஆகிய 14 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
    Next Story
    ×