என் மலர்

  செய்திகள்

  குமுதா - சகுந்தலா
  X
  குமுதா - சகுந்தலா

  தேன்கனிக்கேட்டை அருகே தாய்-மகள் கொலை: டிரைவர் வெறிச்செயல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேன்கனிக்கோட்டை அருகே தாய்-மகளை டிரைவர் அம்மிக்கல்லை தூக்கிபோட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  தேன்கனிக்கோட்டை:

  கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேஷாத்திரி. (வயது 38). இவர் அஞ்செட்டியில் டெம்போ டிரைவராக உள்ளார். இவரது மனைவி குமுதா(34). இவர் அஞ்செட்டி அருகே உள்ள பைல்காடு என்ற கிராமத்தில் அங்கன்வாடி பணியாளராக வேலை செய்து வந்தார்.

  இவர்களது மகள் சகுந்தலா(15) அஞ்செட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

  இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வேளையில் வீட்டில் பயங்கரமாக அலறும் சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்டதும் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் உடனே எழுந்து அங்கு ஓடி வந்து பார்த்தனர்.

  அப்போது வீட்டுக்குள் குமுதாவும், அவருடைய மகள் சகுந்தலாவும் கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். பக்கத்தில் ரத்தக் கறையுடன் அம்மிக்கல் கிடந்தது. அப்போது வீட்டில் இருந்து திடீரென சேஷாத்திரி துணியில் ரத்தம் படிந்த கறையுடன் வெளியே தப்பி ஓடினார்.

  உடனடியாக இது பற்றி அஞ்செட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இளம்பெண் குமுதா மற்றும் அவருடைய மகள் சகுந்தலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  பின்னர் தப்பி ஓடிய சேஷாத்திரியை கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் தீவிரமாக அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சல்லடை போட்டு தேடினார்கள். இன்று அதிகாலையில் போலீசாருக்கு தப்பி ஓடிய சேஷாத்திரி அஞ்செட்டி காப்பு காடு பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காப்பு காட்டுக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த சேஷாத்திரியை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர்.

  எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. டிரைவர் வேலைக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் தான் நான் தினமும் வீட்டுக்கு வருவேன். நேற்று நள்ளிரவில் வீட்டுக்கு வந்தபோது, எனது மனைவி குமுதாவும், எனது மகள் சகுந்தலாவும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

  அப்போது நான், சகுந்தலா அருகே சென்று ஆசைக்கு இணங்குமாறு கூறி அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்தேன். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், என்னை பிடித்து தள்ளினார். மேலும் சத்தம் போட்டு குமுதாவை எழுப்பி நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். இருந்தாலும் நான் அவரை விடவில்லை. சகுந்தலாவிடம் தவறாக முயற்சி செய்தேன். இதனை குமுதா தடுக்க வந்தார். உடனே நான் வீட்டில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து வெறித்தனமாக குமுதாவின் தலையில் சரமாரியாக அடித்தேன். குமுதாவை தாக்கியதை கண்டதும் சகுந்தலா பயத்தில் அலறிக் கொண்டு தடுக்க வந்தார். அவரையும் அம்மிக்கல்லால் அடித்து கொலை செய்தேன். பின்னர் நான் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு இது பற்றி தகவல் கொடுத்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடினேன்.

  இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.

  தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×