என் மலர்

  செய்திகள்

  பார்த்திபன்
  X
  பார்த்திபன்

  கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் மேலும் 2 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்ததையடுத்து பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
  சென்னை:

  சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் நகரில் உள்ள ஒரு பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தின்போது கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் தீயணைப்பு வீரர் ஏகராஜ் பலியானார். தீயில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கொடுங்கையூர் பரந்தாமன் (வயது 67), கவிஞர் கண்ணதாசன் நகர் அபிமன்யூ(40), பேக்கரி உரிமையாளர் ஆனந்தன் (28), அவரது உறவினர் மகிழவன் (18) ஆகியோர் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்கள்.

  அதேபோல், நேற்று முன்தினம் காலை கொடுங்கையூர் கண்ணன் (36), சேலவாயல் பாஸ்கர்(38) என்பவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர்.

  இந்த நிலையில் ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.கே.பி. நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (29) நேற்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். நேற்று இரவு 9 மணியளவில் வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த மணிகண்டன் (28) இறந்து போனார். இதன்மூலம் தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

  Next Story
  ×