என் மலர்

  செய்திகள்

  தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி: கடற்கரை-வேளச்சேரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே
  X

  தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி: கடற்கரை-வேளச்சேரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதையொட்டி ரசிகர்களின் வசதிக்காக சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே சிறப்பு பறக்கும் ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன.
  சென்னை:

  இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

  * சென்னை கடற்கரையில் இருந்து இன்று (சனிக்கிழமை) மற்றும் வருகிற 29, அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4, 12, 14, 15 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.10 மணிக்கு சிறப்பு பறக்கும் ரெயில் புறப்பட்டு, இரவு 12.05 மணிக்கு வேளச்சேரியை சென்றடையும்.

  * அதேபோல், ஆகஸ்டு மாதம் 6, 20 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு சிறப்பு பறக்கும் ரெயில் புறப்பட்டு, வேளச்சேரிக்கு இரவு 11.05 மணிக்கு சென்றடையும்.

  *அதே ரெயில், வேளச்சேரியில் இருந்து இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு இரவு 11.55 மணிக்கு சென்றடையும்.

  * சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.10 மணிக்கு சிறப்பு பறக்கும் ரெயில் ஆகஸ்டு மாதம் 6, 20 ஆகிய தேதிகளில் புறப்பட்டு, இரவு 12.05 மணிக்கு வேளச்சேரியை சென்றடையும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
  Next Story
  ×