என் மலர்

  செய்திகள்

  கைதான தீபா பேரவை நிர்வாகிகள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காட்சி.
  X
  கைதான தீபா பேரவை நிர்வாகிகள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காட்சி.

  குடியாத்தத்தில் தடையை மீறி ஊர்வலம்: தீபா பேரவை நிர்வாகிகள் 100 பேர் திடீர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலம் செல்ல முயன்ற தீபா பேரவை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
  வேலூர்:

  குடியாத்தத்தில் எம்.ஜி.ஆர். அம்மா ஜெ.தீபா பேரவை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. தீபா பேரவையின், வேலூர் மண்டல உயர்மட்ட குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பாண்டுரங்கன் கலந்து கொண்டார்.

  விழாவின்போது, குடியாத்தம் தென்குளக்கரையில் இருந்து ஊர்வலமாக சென்று காமராஜர் பாலம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க தீபா பேரவையை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் தலைமையில் ஊர்வலமாக செல்ல திரண்டனர்.

  ஊர்வலத்திற்கு குடியாத்தம் டவுன் போலீசார் அனுமதி தரவில்லை. போலீஸ் தடையை மீறி தீபா பேரவை நிர்வாகிகள் ஊர்வலம் செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து, டி.எஸ்.பி. பிரகாஷ் பாபு தலைமையிலான போலீசார் ஊர்வலம் செல்லக் கூடாது என்றுக்கூறி எச்சரித்தனர்.

  தீபா பேரவையினருக்கு போலீசார் கெடுபிடிகளை இறுக்கினர். இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் தீபா பேரவை நிர்வாகிகள், தடை உத்தரவை மீறி ஊர்வலமாக புறப்பட தயாராகினர்.

  இதையடுத்து, முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் உள்பட தீபா பேரவை நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அவர்களை திருமணம் மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்.

  முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க சென்றது குற்றமா? என்று கேள்வி எழுப்பிய தீபா பேரவை நிர்வாகிகள், போலீசாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


  Next Story
  ×